
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே. பி முனுசாமி, கடந்த 25 ஆம் தேதி மிக முக்கியமான ஆலோசனை கூட்டம்… மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய அந்த ஆலோசனை கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களுடைய உணர்வுகளை…. அந்தக் கூட்டத்தில்,
மாவட்ட கழக செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர்களும் – நாடாளுமன்ற உறுப்பினர்களும் – தலைமைக் கழக நிர்வாகிகளும் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து, விமர்சனம் செய்தார்கள். அப்படி விமர்சனம் செய்ததன் அடிப்படையில், ஒட்டுமொத்தமாக… அனைவரும்… ஒன்றிணைந்து…. ஏக மனதாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.
அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாம் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்தார்கள். எங்களுடைய பொதுச்செயலாளர்கள் எப்போதுமே அனைத்து தளத்திலும்…. பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டாலும் கூட….. ஒரு தொண்டனுடைய உணர்வோடு…. எங்கு சென்றாலும் நானும் உங்களில் ஒரு தொண்டன் என்று கருத்துக்களை சொல்வார்.
மேடை ஆனாலும் சரி, ஏன் எங்களுடைய ஆலோசனை கூட்டத்தில் கூட அந்த கருத்தை வலியுறுத்தி சொல்வார். அப்படி ஒரு தொண்டனுடைய உணர்வு உடைய எங்களுடைய பொதுச்செயலாளர், 2 கோடி தொண்டர்களுடைய உணர்வுகளை ஏற்றுக் கொண்டு,
அன்று பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறுவது, அதோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் வெளியேறுவது என்று முடிவு செய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு… அந்த தீர்மானத்தை, அன்று மாலையே ஊடகங்களுக்கும்… பத்திரிகைகளுக்கும் படித்துவிட்டு, அறிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.