
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் திப்பம்மா (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகும் நிலையில் 7 வயதில் ஒரு பெண் குழந்தை மற்றும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சம்பவ நாளில் திப்பம்மா தன் குழந்தைகள் இருவரையும் தூக்கில் தொங்கவிட்டார்.
பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சபவை இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திப்பம்மாவின் கணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.