
உத்தரபிரதேச மாநிலத்தின் சண்ட் கபீர் நகர் மாவட்டத்தில் வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது பப்லூ மற்றும் ராதிகா என்பவர்கள் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் பப்லூ வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்நிலையில், ராதிகா கிராமத்தில் உள்ள ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த தகவல் பப்லூவின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும், அவர்கள் பப்லூவிடம் கூறினர்.
இதனைத் தொடர்ந்து, பப்லூ தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சி செய்தார். ஆனால் அது பலனளிக்காத நிலையில, பப்லூ நேரடியாக கிராம மக்கள் முன்பாக இந்த விவகாரத்தை வெளிப்படுத்தினார். அதன்பின், ஒரு தனித்துவமான முடிவை எடுத்து, தனது மனைவிக்கு அவருடைய காதலனுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
அதன்படி கிராம மக்கள் முன்னிலையில் தன்னுடைய மனைவிக்கு அவருடைய காதலனுடன் கணவன் திருமணம் செய்து வைத்த நிலையில் பின்னர் அவருடைய திருமணத்தை முறையாக பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். இரு பிள்ளைகளையும் தான் வளர்த்துக் கொள்வதாக பப்லு தன் மனைவியிடம் கூறிய நிலையில் அவரும் தன் காதலனை கரம் பிடிக்க ஒப்புக்கொண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram