
வேலூர் மாவட்டம் மேல்மாயில் பகுதியில் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இது தொடர்பாக குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பிறகு அவர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தன்னுடைய உறவினரான ஒருவர் ஆசை வார்த்தைகள் கூறி தன்னிடம் நெருக்கமாக இருந்ததாக மாணவி கூறினார். அவருடைய பெயர் சாமிநாதன். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சாமி நாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைதான சாமிநாதனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதன் பிறகு அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் 2-வது மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.