கோவை மாவட்டத்தில் பாலப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இதை ஒட்டி சிறுமுகை வனப்பகுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடி வீரர்களுடன் அந்த இடத்திற்கு சென்றனர். இதையடுத்து  2 மணி நேர போராட்டத்துக்கு பின்பு ராஜநாகத்தை பிடித்து சாக்கு பையில் போட்டனர்.

பின்னர் அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக வனத்துறையினர் விடப்பட்டது. மேலும் அந்த பாம்பு உணவு உண்ண முடியாமல் மிகவும் சோர்வான நிலையில் இருந்துள்ளது. அதாவது இன சேர்க்கையில் ஈடுபட்டாலும் இதுபோன்று சோர்வு நிலை ஏற்படுமாம். அதன் பிறகு அந்த பாம்பு நகர முடியாமல் மிகவும் சிரம பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி அதனை வனப்பகுதிக்குள் பிடித்து விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.