
சேலம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி சேர்ந்தவர் மணிகண்டன்(43). இவர் ஆடிட்டர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டன் விவாகரத்து பெற்றார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மணிகண்டனின் அலுவலகத்திற்கு 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டிலிருந்த வித்யா(31) என்பவர் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் வித்யாவை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு அவரது பெற்றோரிடம் மணிகண்டன் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு மணிகண்டனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் மணிகண்டன் தனது நண்பர்களுடன் வித்யாவின் வீட்டிற்குள் புகுந்து அவரது பெற்றோரை தாக்கியுள்ளார். அதன் பிறகு வித்யாவை காரில் கடத்தி சென்றுள்ளனர்.
அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனையும், வித்யாவையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மணிகண்டனும், வித்யாவும் ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.