உத்திர பிரதேசம் மாநிலம் சாந்த்கபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் ராதிகா தனது முன்னாள் காதலனுடன் முறையற்ற உறவில் இருந்துள்ளார்.

இதனை அறிந்த பப்லு தனது மனைவி ராதிகாவை அவரது முன்னாள் காதலனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். முன்னதாக கிராம மக்களிடம் பேசி பப்லு அவர்களை சம்மதிக்க வைத்துள்ளார். இனிமேல் குழந்தைகளை பப்லு வளர்க்க உள்ளார்.