
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்து வரும் 25வது திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார். இந்த படத்திற்கு பராசக்தி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று படத்தின் டீசர் வீடியோ வெளியானது. இந்நிலையில் பராசக்தி டைட்டில் தன்னுடையது என்ற நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். கடந்த வருடமே பராசக்தி என்ற டைட்டில் வைக்க தான் அனுமதி பெற்றுவிட்டதாகவும் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
பராசக்தி தலைப்பு கொண்ட இந்த படம் இருவருக்குமே 25வது திரைப்படம். இதற்கிடையில் 75 வருடங்களாக தங்களிடமிருந்த பராசக்தி என்ற தலைப்பை சிவகார்த்திகேயனுக்கு வழங்கியுள்ளதாக ஒரே பிரபல ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் பராசக்தி என்ற தலைப்புக்கு தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.