தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி 2024 மக்களவைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலை உங்கள் வாழ்வில் 2 மணி நேரத்தை செலவழித்து வாக்களிக்க செல்லும் வாக்காளர் சரியான நபருக்கு வாக்களிக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்யும் ஒரே தலைவராக பிரதமர் மோடி மட்டுமே இருக்கிறார். மேலும் 400 தொகுதிகளில் வென்று மோடி பிரதமராக மீண்டும் அமரும்போது கோவை தொகுதி நிச்சயம் செழிக்கும் என பேசினார்.