தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இணையத்தில் பதிவிறக்கம் செய்வது மற்றும் மறு கூட்டல் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறு கூட்டலுக்கு பாடம் ஒன்றுக்கு 205 ரூபாய் எனவும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.