
பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு மே 16 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றும், தனித்தேவர்கள் மாவட்ட சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.