நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் நெடுங்காபுளிப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2 மாதமாக சேளூர் நாடு பகுதியில் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். இதுகுறித்து மின்வாரிய அலுவலரிடம் தகவல் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பழுதான ட்ரான்ஸ்பார்மரை மாற்றி சீராக மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அப்பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் வழியாக செல்லக்கூடிய மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் ஆபத்து ஏற்படுத்தும் மின் கம்பிகளை பள்ளி சுற்று சுவருக்கு வெளியே மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் படி அந்த பகுதியில் பழுதான டிரான்ஸ்பார்மரை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து மின் விநியோகத்தை சீர்படுத்தினர். இதனால் மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.