சென்னை சாலிகிராமத்தில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் கவிதா கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காணாமல் போனார். அப்போது அவருடைய மகளுக்கு வயது 2. அதாவது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். இது தொடர்பாக கணேஷ் அப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இருப்பினும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தொடர்பாக தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுமியை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதாவது காணாமல் போன சிறுமிக்கு தற்போது 14 வயது இருக்கும் என்பதால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுமியின் தற்போதைய உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை போஸ்டராக காவல்துறையினர் வெளியிட்டு காணாமல் போன சிறுமையை தேடி வருகிறார்கள்.