தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சித்தார்பட்டி என்ற கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ள நிலையில் இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் லித்திகா ஸ்ரீ என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருந்தது. இந்த நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் இரவு வாயில் நுரை தள்ளிய இரண்டு வயது குழந்தையை லித்திகா ஸ்ரீ மயங்கியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் குழந்தையை பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு சர்க்கரை அளவு 400 இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.