
கரூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது நபர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி 4 வயது மகனும், 2 வயது மகளும் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூலித்தொழிலாளி தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய 2 வயது மகளை மாடிக்கு தூக்கி சென்றார். இதனையடுத்து மாடியில் வைத்து தனது குழந்தை என்று கூட பார்க்காமல் தகாத முறையில் நடந்து கொண்டார். அந்த சமயம் தூங்கி கொண்டிருந்த குழந்தை கண் விழித்தார். இதனால் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையை வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல வீட்டிற்குள் சென்று படுத்து கொண்டார்.
இந்த நிலையில் குழந்தை காணாமல் போனதால் அவரது தாய் வீட்டை சுற்றி தேடி பார்த்தார். அதன்பிறகு மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு குழந்தையின் உடைகள் கிழிந்து கிடந்தது. இதனால் பதறிப்போன குழந்தையின் தாய் அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் எட்டி பார்த்தார். அப்போது தொட்டிக்குள் குழந்தை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே தனது மகளை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது தொழிலாளியே மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.