
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் வருவதுண்டு. இந்நிலையில் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த முத்தப்பாவின் மகளும், பெங்களூருவை சேர்ந்த சென்னப்பாவின் மகளும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் திடீரென நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.