
முத்துராமலிங்கத் தேவருக்கு பசும்பொன் கிராமத்தில் மண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியீட்டு இருக்கிறார்.
தமிழக முதலமைச்சர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். வரக்கூடிய 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உடைய குருபூஜை விழா நடைபெற இருக்கின்றது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்த இருக்கிறார்.
இந்த நிலையில் அரசு சார்பில் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதையை செலுத்தக்கூடிய வகையில்1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் ஒரு மண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தக்கூடிய வகையிலே அந்த பாதையில் 12 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் மற்றொரு மண்டபமும் தமிழக அரசால் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.