
உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜ் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
இவர்களைத் தேடி வந்த உத்தர் பிரதேச போலீசார் இவ்விருவரின் தலைக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை என்றும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த சகோதரர்கள் இருவரும் தஞ்சாவூரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் காவல்துறை அதிகாரிகள் இவருவரையும் கைது செய்து உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.