கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் காரங்காடு நெல்லிவிளையை சேர்ந்த தேவி என்பது தெரியவந்தது.

அவர் மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தேவியை கைது செய்ததோடு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல பாலப்பள்ளம் பகுதியில் மது விற்பனை செய்த செல்வம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.