
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏன் எங்களது வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்கிறீர்கள்? என கூறி தகராறு செய்தனர். மேலும் அவர்கள் போலீசை நோக்கி அரிவாளால் வெட்ட முயன்றதாக தெரிகிறது.
உடனே போலீசார் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் பிரபல நடிகரான மகேஷ் மற்றும் ஜெய சாரதி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகேஷ், ஜெயசாரதி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.