அமெரிக்க நாட்டில் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் மாணவர்கள் இருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டின் அயோவா நகரத்தில் அமைந்துள்ள டெஸ் மொயின்ஸ் என்ற பட்டய பள்ளியில் நேற்று மதிய நேரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்த மூன்று பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
அதில் இருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியாகினர். மற்றொரு நபர் அந்த பள்ளியில் பணியாற்றும் ஊழியர். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது, இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.