டெல்லி சாணக்கியாபூர் பகுதியில் குவைத் நாட்டிற்கான தூதரகம் ஒன்றுள்ளது. இங்கு அபு பக்கர் (70) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே தூதரகத்தில் 20 வயதில் இளம்பெண் ஒருவர் பராமரிப்பு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அபு பக்கர் அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அந்த இளம் பெண்ணின் கணவர் அபு பக்கரை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அபு பக்கர் அந்தப் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் அபு பக்கரை கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.