
சீன நாட்டிலுள்ள ஹூபே மாகாணத்தில் சியான் நகர் உள்ளது. இங்கு ஜிங் (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கும் நிலையில் தன் மனைவியின் நடத்தையின் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தன் மனைவியை கண்காணிக்க அவர் முடிவு செய்தார். இதற்காக அவர் ட்ரோன் கேமராவை பயன்படுத்தினார். அவர் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி தன்னுடைய மனைவியை தொடர்ந்து கண்காணித்து வந்தார்.
அப்போது காரில் ஒருவருடன் சென்ற அவருடைய மனைவி மலைப்பகுதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு குடிசைக்குள் இருவரும் சென்ற நிலையில் 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தன் மனைவியிடம் விசாரித்த போது தன் மனைவி வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளருடன் அவர் தகாத உறவில் இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த ஆதாரத்தை வைத்து ஜிங் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.