தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடைய செல்போன் அழைப்புகளை திமுக அரசு ஒட்டு கேட்பதாகவும் எனவே பாஜக தொண்டர்கள் செல்போனில் பேசும் போது மிகவும் கவனத்துடன் பேச வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது சீமானும் தன்னுடைய செல்போன் அழைப்புகளை கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஒட்டு கேட்கிறார்கள் என்று பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். அதாவது இந்தியாவில் உள்ள 50 தலைவர்களில் என்னுடைய செல்போன் அழைப்புகளும் ஒட்டுக்கேட்கப்படுகிறது. இந்த நாட்டில் தனிமனித சுதந்திரம் என்பது கிடையாது என்றார். இது மிகவும் அநாகரிகமானது என்று கூறினார்.

மேலும் தமிழகத்தில் சீமான் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தங்களது செல்போன் அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுவதாக கூறியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.