விழுப்புரம் பகுதியில் வசித்து வரும் ஆரோக்கியசாமி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊறுகாயுடன் சேர்த்து 25 சாப்பாடு ஆர்டர் கொடுத்துள்ளார்.

ஆனால் பார்சலில் வீட்டிற்கு வந்து பார்த்ததும் பார்சலில் ஊறுகாய் இல்லை என்பது தெரிய வரவே, நேரடியாக ஹோட்டலுக்கு சென்று இல்லாத ஊறுகாய்-க்காண பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஹோட்டல் நிர்வாகம் பணத்தை தர மறுக்கவே மன உளைச்சலான அவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கின் தீர்ப்பின் படி, பாதிக்கப்பட்டவர் மன உளைச்சல் அடைந்த காரணத்தினால் ரூபாய் 30,000, வழக்கு செலவுக்கு ரூபாய் 5000 மேலும் ஊறுகாய் இழப்பீடாக ரூ 25 என மொத்தம் 35,025 ரூபாய் அவருக்கு இழப்பீடாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.