
2023 முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா வருகிற ஜுன் மாதம் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகள் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக சென்னையில் 17 இடங்களில் ஜுலை 1-25 ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.