
2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டியில் பல சாதனை படைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு 200 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இந்த ரன்களை சேஸ் செய்த இந்திய அணி 52 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கிய சாதனைகள் செய்யப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளன.
இந்தப் போட்டி சென்னை மைதானத்தில் நடைபெற்றது. உலகக் கோப்பையில் சென்னையில் விளையாடும் போது ஆஸ்திரேலியாவின் சாதனை பலமாக இருந்தது. 1987 முதல் ஒருநாள் உலக கோப்பையில் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட தோற்றதில்லை. இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றது. ஆனால் ஆஸ்திரேலிய அணி சென்னையில் தோற்றது இதுவே முதல் முறை.
முதல் 3 பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்து வெற்றி பெறும் அணி :
2 ரன்களில் 3 விக்கெட் – இந்தியா v ஆஸ்திரேலியா, சென்னை, 2023* (இந்தியா வெற்றி)
4 ரன்களில் 3 விக்கெட் – இந்தியா v ஜிம்பாப்வே, அடிலெய்டு, 2004 (இந்தியா வெற்றி)
4 ரன்களில் 3 விக்கெட் – இலங்கை v பங்களாதேஷ், மிர்பூர், 2009 (இலங்கை வெற்றி)
5 ரன்களில் 3விக்கெட் – இலங்கை v நியூசிலாந்து, டாக்கா, 1998 (இலங்கை வெற்றி)
உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப்பெரிய இன்னிங்ஸ் செய்த பேட்ஸ்மேன் :
ஷிகர் தவான் – 117 ரன்கள், 2019
அஜய் ஜடேஜா – 100* ரன்கள், 1999
கேஎல் ராகுல் – 97* ரன்கள், 2023
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் :
விராட் கோலி – 2785 (64 இன்னிங்ஸ்)
சச்சின் டெண்டுல்கர் – 2719 (58 இன்னிங்ஸ்)
ரோஹித் சர்மா – 2422 (64 இன்னிங்ஸ்)
யுவராஜ் சிங் – 1707 (62 இன்னிங்ஸ்)
சவுரவ் கங்குலி – 1671 (32 இன்னிங்ஸ்)
உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த பேட்ஸ்மேன் :
19 இன்னிங்ஸ் – டேவிட் வார்னர்*
20 இன்னிங்ஸ் – சச்சின் டெண்டுல்கர் / ஏபி டி வில்லியர்ஸ்
21 இன்னிங்ஸ் – விவ் ரிச்சர்ட்ஸ்/சௌரவ் கங்குலி
22 ஓவர்கள் – மார்க் வாக் / ஹெர்ஷல் கிப்ஸ்
ஒருநாள் உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தனர் :
ஜிம்பாப்வேக்கு எதிராக, 1983 (சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் டக் அவுட்) இப்போட்டியில் இந்தியா வெற்றி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023 ( இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா டக் அவுட்) இப்போட்டியில் இந்தியா வெற்றி.
ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமான ரன் சேஸிங்கில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் :
விராட் கோலி – 5517 ரன்கள்
சச்சின் டெண்டுல்கர் – 5490
ரிக்கி பாண்டிங் 4186
ரோஹித் சர்மா – 3983