நாட்டின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுகலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களைத் தவிர இதன் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் இந்த தேர்வின் மதிப்பெண்களைக் கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

அதன்படி தற்போது 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் மூன்றாம் தேதி வரை பெறப்படுவதாகவும், பொது பிரிவினருக்கு 4 ஆயிரம் ரூபாய் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 3500 விண்ணப்ப கட்டணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய 8047162020 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.