
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு கள ஆய்வும் மேற்கொள்ளுமாறு அதிமுக மேல் இடம் உத்தரவு போட்டுள்ளது. இதற்கான பணிகளில் முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அரியலூரில் நடைபெற்ற கள ஆய்வு பணியில் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெற்றால் தான் ஷோக்காக செல்ல முடியும். இந்த தேர்தல் நமக்கு வாழ்வா சாவா என்பது போன்றது. ஒருவேளை 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால் தமிழக அரசியல் களம் மாறி சிறிய கட்சிகள் மேலே வர வாய்ப்பு உள்ளது.
எனவே 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது அவசியம் அதற்காக நிர்வகிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென்றார். மேலும் முன்னதாக திருச்சியில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசிக்கொண்டிருக்கும்போது நிர்வாகிகள் சிலர் கீழே பேசிக்கொண்டிருந்ததால் கோபமடைந்த அவர் நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லை என்றார். அதன் பிறகு அதிமுகவினரிடம் ஒற்றுமை இல்லாவிடில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் கண்டிப்பாக அதிமுக எதிர்க்கட்சியாக தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.