தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்த நிலையில் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதே நேரத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பார்களா என்ற கேள்விக்கு அதிமுக உள் கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட போவது கிடையாது என்று அவர் கூறிவிட்டார். இதன் காரணமாக இருவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பார்களா இல்லையா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் டிடிவி தினகரன் நாங்கள் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று கூறினார். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் நயினார் நாகேந்திரன் இது பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு சீட் ஒதுக்குவது தொடர்பாக அதிமுகவுடன் கலந்தாலோசனை செய்த பிறகு முடிவு செய்யப்படும். இது தொடர்பாக எங்கள் கட்சியின் ஆட்சி மன்ற குழு தான் முடிவு செய்யும். வருகிற தேர்தலில் சீட் ஒதுக்குவது தொடர்பாக ஆலோசிக்க அதிமுகவும் குழு அமைக்கும். டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருந்த நிலையில் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அனைவரும் 2026 தேர்தலில் இதே கூட்டணியில் நீடிப்பார்கள். அண்ணாமலை தன்னுடைய ஸ்டைலில் கட்சியை வளர்த்துள்ளார். மேலும் கட்சி தன்னுடைய இலக்குகளை அடைய எப்போதுமே என்னுடைய மென்மையான குணம் ஒரு பிரச்சினையாக இருக்காது என்று கூறியுள்ளார்.