நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். 2026 தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. விஜயின் பேச்சுக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அதிமுக கட்சியுடன் நான் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைக்கும் என சோசியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் வருகிற 2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்தோ அல்லது தமிழக வெற்றி கழகம் தலைமையில் கூட்டணி அமைத்தோ தான் போட்டியிடும் என அறிக்கை வெளியானது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அணி பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என கூறியுள்ளார்.