முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவருடைய ஆதரவாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். அதன்படி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை அவர் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் இடம் பெறுவாரா என்ற கேள்விக்கு அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று அமித்ஷா கூறிவிட்டார். இதன் காரணமாகத்தான் ஓபிஎஸ் தனி கட்சி தொடங்க இருப்பதாகவும் அவர் விஜய் உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் சமீபகால பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் ஆதரவாக பேசி வரும் சீமான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் திடீரென ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசி உள்ளார். இதன் காரணமாக அவர் ஓபிஎஸ் உடன் இணைந்து புதிய கூட்டணி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது பற்றி சீமானிடம் கேட்கும் போது எனக்கும் அவருக்கும் இருக்கும் உறவு தந்தை மகன் உறவு போன்றது. நான் அடிக்கடி அவரை சந்திப்பது வழக்கம்தான். அந்த அடிப்படையில் தான் தற்போதும் சந்தித்துள்ளேன். இதில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று கூறினார். மேலும் ஓபிஎஸ் தனி கட்சி தொடங்க இருப்பதால் சீமானின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.