உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்தை தெரிவிக்கும் விதமாக விதவிதமாக போஸ்டர் ஒட்டினர். அந்த வகையில் சென்னையில் உள்ள பழவந்தாங்கல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விஜய் படத்துடன் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று கூறி போஸ்டரை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த போஸ்டரில் எம்ஜிஆர் படத்துடன் விஜய் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் இருப்பது போன்று இருக்கிறது. அதில் 2026 இல் தமிழகத்தைக் காக்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.