
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மகளிர் தின விழா விழுப்புரம் மாவட்டத்தில் கொண்டாடப்பட்ட போது நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த நிகழ்ச்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பதவி கிடையாது என்றும் கட்சிக்காக சைக்கிள் மிதித்து போஸ்டர் ஒட்டிய உண்மையான தொண்டனுக்கு மட்டும்தான் பதவி வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் பிற கட்சியில் இருந்து வந்த ஆதவ் அர்ஜுனா போன்றோருக்கு பதவிகள் வழங்கப்பட்டதால் அவருடைய கருத்து சர்ச்சையாக மாறியது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கில்லி சுகர்னா புஸ்ஸி ஆனந்தை கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, எங்களை புஸ்ஸி ஆனந்த் வேறு கட்சியிலிருந்து வந்தவர்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக புறக்கணிக்கிறார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் அவருக்கு தமிழக அரசியல் பற்றி தெரியவில்லை. உங்களுக்கு கொஞ்சமாவது அரசியல் அறிவு மற்றும் ஞானம் இருக்கிறதா.? என்னுடைய தலைமையில் கிட்டத்தட்ட 2000 பேர் அவரை வரவேற்பதற்காக காத்திருந்தோம். ஆனால் புஸ்ஸி ஆனந்த் இது மோகன் மாவட்டம் இதில் யாரும் தலையிட வேண்டாம் இங்கிருந்து ஓரமா போங்க என்று கூறிவிட்டார். அவர் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என்பதால் மட்டும் தான் மதிப்பும் மரியாதையும். அதற்காக மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை இவ்வளவு கேவலமாக பேசலாமா.
அவருக்கு முன்பாகவே நான் அரசியலுக்கு வந்தவன். விஜயின் ரசிகன். என்று விஜய் கட்சி ஆரம்பித்தாரோ அப்போதே அனைத்தையும் உதறிவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் வந்து இணைந்து விட்டோம். கடந்த 2006 இல் தமிழகத்தில் முதல் நகர மன்ற உறுப்பினராக விஜய் நடித்த கில்லி படத்தின் பெயரை தாங்கிக்கொண்டு போன தமிழ்நாட்டின் முதல் கவுன்சிலர் நான் நான்தான். எனக்கு பிறகுதான் ஆனந்த் அரசியலுக்கு வந்தார். அப்படி பார்த்தால் நான் தான் சீனியர். தொடர்ந்து மாற்றுக் கட்சியினருக்கு பதவி வழங்கப்படாது என்று அவமரியாதையாக பேசி வந்தால் 2026 ஆம் ஆண்டு விஜய் கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது. புஸ்ஸி ஆனந்த் செயல்படுவதை பார்த்தால் விஜயை காலி செய்வதுதான் அவருடைய ஒரே ஒரு நோக்கமாக கொண்டுள்ளார் போன்று தெரிகிறது. இப்படியே பேசிட்டு இருந்தா கண்டிப்பாக விஜய் கட்சி காலி ஆகிவிடும். மேலும் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் இந்த துண்டு ஒருபோதும் என் கழுத்தில் இருந்து இறங்காது என்று கூறியுள்ளார்.
விழுப்புரம் வருகை புரிந்த பொதுச் செயலாளர் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை கண்டித்து கனத்த இதயத்துடன் எனது வன்மையான கண்டனம் #TVKITWING #TVKparty #தமிழகவெற்றிக்கழகம்@TVKVijayHQ @TVKHQUpdates@imrajmohan @DrSambathkumar@BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar @NirmalaSuku… pic.twitter.com/vkGtXK5xct
— Gilli Sugarna EX.MC (@HAshadu) March 8, 2025