
சீன வர்த்தக விண்வெளி நிறுவனமான CAS ஸ்பேஸ், தனது முதல் விண்வெளி சுற்றுலா ராக்கெட்டை 2028 ஆம் ஆண்டு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. விண்வெளிக்கு பயணம் செய்ய ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2.35 கோடி முதல் 3.53 கோடி ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஏழு பயணிகளை அழைத்துச் செல்லவும் 100 மணி நேரத்திற்கு ஒரு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.