சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் ஒரு 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். அதாவது காடு மரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமர் என்ற 38 வயது நபருடன் ஒரு கோவிலில் வைத்து சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பமில்லாத நிலையில் தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.