அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் விக்டர் (49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய மனைவியை பிரிந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி காணாமல் போனார். இது தொடர்பாக அவருடைய தாய் பாத்திமா மேரி கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அவர் ஜனனி (21) என்ற இளம் பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து ஜனனி மற்றும் அவருடைய உறவினரான தட்சிணாமூர்த்தி (22) ஆகியோர் கொலையை ஒப்புக்கொண்டு தாமாகவே முன்வந்து சரணடைந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது ஜனனிக்கும் விக்டருக்கும் இருக்கும் இடையே பழக்கம் இருந்த நிலையில் வறுமையில் வாடிய ஜனனி குடும்பத்திற்கு அவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இதனால் ஜனனி மற்றும் விக்டர் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையில் ஜனனிக்கு வேறொரு வாலிபருடன் திருமணம் நடைபெற இருந்தது.

இதை தெரிந்து கொண்ட விக்டர் வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது அப்படி செய்தால் உல்லாசமாக இருந்ததை வெளியில் கூறி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ஜனனி தன்னுடைய உறவினரான தட்சிணாமூர்த்தி என்பவருடன் சேர்ந்து விக்டரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி சம்பவ நாளில் ஜனனி வீட்டுக்கு விக்டர் சென்ற நிலையில் அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த தட்சணாமூர்த்தி இரும்பு கம்பியால் அவரை பலமாக தாக்கினார். பின்னர் இருவரும் அவருடைய உடலை சாக்குப்பையில் கட்டி ஒரு முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற இடத்தில் சென்று பார்த்தபோது அவரின் உடல் சாக்கு பையில் எலும்புக்கூடாக கிடந்தது. மேலும் இவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.