
சவக்கிடங்கு என்ற பெயரை கேட்டவுடன் பலரும் அங்கு செல்லவே அச்சப்படுவார்கள். ஆனால் பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த மஞ்சு தேவி என்ற 48 வயது பெண் கடந்த 23 வருடங்களாக பிரேத பரிசோதனை பணிகளில் உதவியாளராக பணியாற்றி தன்னை துறவி என்று உணர்கின்றார். இவர் இதுவரை 20,000 மேற்பட்ட பிரேத பரிசோதனைகளை செய்துள்ளார். இறந்தவர்களின் உடல் உறுப்புகளை வெட்டி மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி மீண்டும் தையல் போடுவது தான் தன்னுடைய வேலை என்றும் அவர் கூறியுள்ளார்.