தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டில் பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்கு செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதனைப் போலவே ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான தேவை போக 1862 ஆசிரியர்களும் அவர்களுக்கான பணியிடங்களும் உபரியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை 24 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இன்று இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.