பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சாதித்த அர்ச்சனா காமத் தற்போது டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டியில் விளையாடிய நிலையில் காலிறுதி சுற்று வரை முன்னேறினார். இவர் மட்டும்தான் இந்தியா சார்பில் காலிறுதி போட்டியில் ஒரு சுற்றில் வெற்றி பெற்றிருந்தார்‌.

இந்நிலையில் அர்ச்சனாவுக்கு தற்போது 24 வயது ஆகும் நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அதாவது மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல இருப்பதால் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். அவர் பொருளாதாரம் சம்பந்தமான படிப்பை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 24 வயதில் அர்ச்சனா ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.