
மராட்டிய மாநில மும்பை சப் அர்பன் மாவட்டத்தில் கண்டிவாலி என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் நேற்று சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அக்ஷயா என்ற ஒன்பது வயது சிறுமி அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதனால் படுகாயம் அடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.