
குஜராத் மாநிலத்தை விட தமிழ்நாட்டுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
கடந்த 3 ஆண்டுகளில் மாநில வாரியாக விளையாட்டுத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ஒன்றிய அரசு ரூபாய் 1800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.. கடந்த 3ஆண்டுகளில் கர்நாடகத்துக்கு ரூபாய் 127 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூபாய் 101 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திற்கு ரூபாய் 587 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூபாய் 19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குஜராத்துக்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூபாய் 346 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது ஒன்றிய அரசு.
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பயிற்சி மையங்கள் குஜராத்தை விட தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. குஜராத்தில் 15 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பயிற்சி மையங்களும், தமிழ்நாட்டில் 18 மையங்களும் உள்ளன. குஜராத்தை விட தமிழ்நாட்டில் அதிக பயிற்சி மையங்கள் உள்ளபோது சொற்பநிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக கோவா மாநிலத்திற்கு ரூபாய் 4.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது ஒன்றிய அரசு. பாஜக ஆளும் மாநிலங்களில் விளையாட்டு துறை மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் அம்பலமாகிவிட்டது.
