பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை முடித்துவிட்டு கன்னியாகுமரி வந்த நிலையில் அங்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்களுக்கு தியானம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய தியானம் முடிவடைந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணி அளவில் தன்னுடைய தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி 11 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து உணவின்றி  தியானம் செய்தார்.

தொடர்ந்து 3 நாட்களாக தியானம் செய்த பிரதமர் நரேந்திர மோடி மொத்தமாக 45 மணி நேரம் தியானம் செய்து இன்றுடன் தன் தியானத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். மேலும் இதைத் தொடர்ந்து திருவள்ளுவர் மண்டபத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லிக்கு கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.