திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் பகுதியில் நேற்று காலை வங்கி ஊழியர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய கண்கள் கை கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர் சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (39) என்பது தெரிய வந்தது.

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இந்த பணியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக விலகி விட்டதாக கூறப்படும் நிலையில் கடந்த 3 நாட்களாக திடீரென அவர் வீட்டில் இருந்து காணாமல் போனதாக கூறி அவருடைய தந்தை அழகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த நிலையில் இந்த வழக்கில், விக்னேஷ், திருப்பதி, கார்த்திக் குமார், முத்துக்குமார், பன்னீர்செல்வம், லியோ சார்லஸ் மற்றும் ஜஸ்டின் ராஜா ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பாலமுருகனை கடத்தி சென்று 3 நாட்களாக சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது..