மதுரை அருகே துரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனை கடித்ததற்கு சிறிது முக்கியத்துவமும் அளிக்காமல் சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்தார்.

சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவரது நிலைமைக் மோசமாக இருந்ததால், அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கொண்டு செல்லப்பட்ட பாலமுருகனை, ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது திடீரென தப்பி ஓட முயன்ற பாலமுருகனை  மீண்டும் பிடித்து சிகிச்சைக்காக தனி அறையில் அடைத்து வைத்தனர்.

இந்நிலையில், கடுமையான வலி மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பாலமுருகன், போர்வையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, பாலமுருகனின் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உடற்கூறாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.