தமிழக அரசானது தமிழகத்தில் படித்து வரும் ஏழை எளிய மாணவர்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிதி உதவிகளும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையால்  “கிராமப்புற பெண்கள் ஊக்கத்தொகை திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமபுற பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் சமூகங்களின் (DNC)  சீர் மரபினர் சமூகங்களின் மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. அதன்படி கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு வருடம் தோறும் 500 ரூபாயும், ஆறாம் வகுப்புக்கு மேல்  படிக்கும் மாணவிகளுக்கு வருடம் தோறும் ஆயிரம் ரூபாயும் அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

மேலும் இந்த திட்டம் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலுமே செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக பயனாளி தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், குடும்ப வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமலும்  இருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்திற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய கிராமப்புறங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.