
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் மேரி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி காதலர்கள் வேளாங்கண்ணி மாதா கோவில் பின்புறம் இருக்கும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். மறுநாள் வேளாங்கண்ணி மாதா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று மாலை வேளாங்கண்ணி ரயில் நிலையம் அருகே காட்டுப்பகுதியில் ஜனார்த்தனன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜனார்த்தனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மேரியிடம் விசாரித்த போது தனது கணவரின் நண்பர்களே அவரை கொலை செய்து விட்டனர் என கூறியுள்ளார். அதாவது எனது கணவரின் நண்பர்களான ஜீவா, 17 வயது சிறுவன் ஆகியோர் எங்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர். அதன் பிறகு உனது கணவரை ரயில்வே ஸ்டேஷன் அருகே கொலை செய்து விட்டோம் என கூறிவிட்டு இருவரும் தப்பி சென்றதாக மேரி கூறினார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதனால் ஜீவாவையும், 17 வயது சிறுவனையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
அதாவது ஜீவாவும் மேரியும் ஒரே கல்லூரியில் படித்தனர். இருவரும் காதலித்து வந்தனர். இதற்கிடையே மேரிக்கு ஜனார்த்தனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். பின்னர் ஜனார்த்தனுடன் வாழ பிடிக்காமல் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக ஜீவாவையும் அவரது நண்பரையும் வரவழைத்து ஜனார்த்தனை கொலை செய்து நாடகமாடியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மேரிக்கு தர்மபுரியில் முதல் திருமணம் நடைபெற்றது. இரண்டாவதாக ஜனார்த்தனை திருமணம் செய்துள்ளார். மூன்றாவது திருமணம் செய்து கொள்வதற்காக ஜனார்த்தனை கொலை செய்தது தெரியவந்தது.