
கேரள மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது ஷிபிலா என்ற 21 வயது தன்னுடைய கணவர் யாசிருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்ததால் ஷிபிலா தன் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த யாசீர் தன்னுடைய மாமனாரான அப்துல் ரகுமானை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக அவர் ஒரு புதிதாக கத்தி வாங்கிய நிலையில் தன் மாமனாரை கொலை செய்ய அங்கு சென்றார். ஆனால் அவர் தன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மாமனாரை கொலை செய்ய சென்றதாகவும் ஆனால் தற்செயலாக தன்னுடைய மனைவியை கொன்று விட்டதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய மனைவியை மிகவும் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது முஸ்லிம்கள் ரம்ஜான் நோன்பு இருக்கும் நிலையில் ரமலான் நோன்பு திறக்கும் நேரத்தில் யாசிர் காரில் தன் மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த தன்னுடைய மனைவியின் கழுத்தில் அவர் கத்தியால் குத்திய நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த கொடூர கொலையை மூன்று வயது குழந்தை கண்முன்னே பார்த்தது. அதுமட்டுமின்றி தன் மனைவியின் பெற்றோரையும் அவர் கொடூரமாக தாக்கிய நிலையில் தற்போது அவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி யாசிர் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரை கூட தாக்க முயற்சி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் யாசீரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் அவருக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவோம் என்று கூறியுள்ளனர்.