இணையதளத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஷிங்கனில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது 3 சிறுவர்கள் மேடையில் ஏறி தூக்கில் தொங்குகின்றனர். அப்போது கீழ இருந்து வந்த நபர் ஒருவர் அந்த சிறுவர்களில் ஒருவரை தூக்குகிறார்.

இதனை பார்த்த மற்றொருவர் இங்கிருந்து செல்லுமாறு மிகவும் ஆக்ரோஷத்துடன் கத்துகிறார். இதையடுத்து மேடையில் இருந்த மற்ற 3 பேரும் அக்குழந்தைகளை தூக்கி, அவர்கள் முகத்தில் அணிந்து இருந்த கருப்பு நிற துணியையும் அகற்றினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.