
திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூரில் மாநில அளவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் அத்தாணி எஸ்.வி.ஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் கிருத்திக் என்ற மாணவர் போட்டியில் கலந்து கொண்டார்.
இந்த சிறுவன் 25 மீட்டர் பிரீஸ்ட் ஸ்ட்ரோக் பார் பாய்ஸ் பிரிவில் ஆக்குவாஸ் பாஸ்ட் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்ற சிறுவனுக்கு பள்ளியின் தாளாளர் ரவிச்சந்திரன், முதல்வர் கீதா ஆசிரியர்கள் உள்பட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.